பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளையவன் நாடக பாத்திரங்கள் 1. வீடணன் 3. புலவன் 2. அமைச்சர் 4. திரிசடை 5. இந்திரசித்து 1 (வீடணன் தர்பாரில் அமர்ந்துள்ளான்) வீடணன் அமைச்சரே, போரில் ஏற்பட்ட களைப்புத் தீர்ந்தும் நம் குடிகள் மகிழ்ச்சியுடன் இல்லையே! அமைச்சர் : விபீஷண மகாராஜாவினுடைய நாட்டில் அமைதிக்குக் குறைவென்ன? இருந்தாலும், பழைய இலங்கையில் வாழ்ந்து பழகியவர் சிலர் மட்டும் இன்னும் முணுமுணுத்துக்கொண்டு தான் இருக் கின்றனர். அவர்கள் வயதின் சுபாவம். விட : அவர்கள் குறை என்னவாம்? வயோதிகர் குறையைப் போக்கி அவர்கட்கு வேண்டுவதைச் செய்வது நம் கடமை அல்லவா? அமை : அரசே, அவர்கள் நியாயமானவற்றிற்குக் குறைபட்டால் செய்யலாம். இயலாதவற்றைக் கேட்டுக் குறைபட்டால், நாம் என்ன செய்ய முடியும்? ;