பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளையவன் 225 விட : என்ன! நம்மால் முடியாதது ஒன்றும் இருக்கிறதா?, உடனே கூறும் செய்துவிடலாம். அமை : என்ன மகாராஜா, நீங்களே இப்படிக் கேட்டால், நான் என்ன செய்வது? விட அமைச்சரே, அஞ்ச வேண்டா. மனத்தில் உள்ளதைக் கூறும். அமை ஒன்றும் இல்லை. பழைய இலங்கையில் இருந்தனவெல்லாம் இப்பொழுது வேண்டுமென்றால் எங்குப் போவது? அப்பொழுது தேவர்கள் வந்து உங்கள் தமையனார் இராவணருக்கு ஏவல் செய்தனர். அரக்க மாதர்களைத் தேவமாதர் வந்து குளிப்பாட்டினர். அவையெல்லாம் இப்பொழுது நடைபெற முடியுமா? விட இது என்ன பேதைமை ! அண்ணனுடைய கொடுமைக்கும் ஆட்சிக்கும் பயந்துகொண்டு அல்லவா இவை எல்லாம் நடந்தன? சரி. இவ்வாறு கூறுகிறவர் யார்? . . - அமை : பலர் இருக்கின்றனர். சிறப்பாகப் புலவன் ஒருவன் இருக்கிறான். அவன்தான் உங்கள் ஆட்சியைச் சட்டை செய்யாமல் வாயில் வந்தபடி எல்லாம் ஏசித் திரிகிறான். . விட அமைச்சரே, அத்தகைய புலவனை நாம் காண் வேண்டும். அவனை அழைத்துவரச் செய்யும். 2 (புலவர் விடு: புலவர், அமைச்சர்) புலவன் : நந்திரு நகரே யாதி வேறுள நகர்கட் கெல்லாம் வந்தபே ருவமை கூறி வழுத்துவான் அமைந்த காலை