பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெள்ளாற்று நந்தி 13 மற்ற வேலைகள் அனைத்தும் ஒரு புறம் இருக்கட்டும். புலவரை முதலிற் பாடச் செய்யுங்கள். அமை : ஒரு விண்ணப்பம் அரசே! நந்தி : தாராளமாகக் கூறலாமே. ஆனால், கவிதையை அனுபவிக்க என் மனம் விரைகின்றது. சொல்ல வேண்டியவற்றை விரைவிற் கூறிவிடும். அமை : அரசே, எத்தனையோ அலுவல்கள் அரசர் வருகைக்காகக் காத்து நிற்கின்றன. நந்தி : என்ன அப்படித் தலைபோகிற காரியம்? அமை : தெள்ளாற்றுப் போரில் போரிட்ட வீரர்கட்குப் பரிசுகள் வழங்கவேண்டாவா? தங்கள் தம்பிகட்குத் தனி மரியாதைகள் செய்ய வேண்டும் என்று கூறினர்களே? நந்தி ஆம், செய்யவேண்டியதுதான். ஆனால், நம்முடைய அரசாட்சியில் தமிழுக்கும் தமிழ்க் கவிதைக்குந்தான் முதலிடம். அமை : அரசே! முக்கியமான அலுவல்கள். நந்தி : கவலை இல்லை அமைச்சரே! தமிழ் காத்துக் கொண்டு நிற்கையில், தமிழ்க் கவிதையை அனுபவிப்பதை விட்டுவிட்டு வேறு என்ன வேலை இருந்தாலும் அதற்காக நான் கவலைப்படப் போவதில்லை. அமை : அரசே! இந்தத் தமிழ்ப் பற்றுத் தங்கட்குப் பெருந்தீங்கை உண்டாக்கவும் காரணமாகலாம். அதுபற்றி எச்சரிப்பது அமைச்சனாகிய எனது கடன். நந்தி : அமைச்சரே! அஞ்சவேண்டா. தமிழால் அழிவு வருவதாயின் அதை வரவேற்கிறேன். முன்னர் இத் தமிழ் நாட்டில் வள்ளல் தன்மைக்காக உயிர் விட்ட