பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 * - பிரிவு 3. (சீதையும் திரிசடையும் உரையாடுகின்றனர்) திரிசடை : அம்மா, இன்னுமா நீங்கள் உறங்கவில்லை! சீதை திரி சீதை திரி : சீதை பொன் போன்ற உங்கள் மேனிஅழகு வாடி விட்டதே! இராகவருடைய வன்மை தெரிந்தும் இன்னும் ஏன் கவலை? நிச்சயம் வந்து உங்களை மீட்டுப் போவார் என்பதில் என்ன சந்தேகம்?

திரிசடை, என் முடிவு என்ன ஆகும் என்பதில் நான்

ஐயப்படவில்லை. ஆனால். பின் ஏன் அம்மா, ஆனால்' என்று இழுக்கிறீர்கள்? இரவானால் மிகுதியும் கவலைப் படுகிறீர்கள். பூரண நிலாக்காயும் இன்றைக்கு அதன் அழகைப் பார்த்து நம் கவலையை மறக்க வேண்டுவதிருக்க, கவலைப் படுவது எதற்காக? இப்படிப் பெருமூச்சுவிடச் சந்திரன் என்ன வெப்பமாகவா இருக்கிறான்? (பெருமூச்சுடன்) நீ குழந்தை என்பது சரியாய் இருக்கிறது திரிசடை! உனக்கு நிலவு இன்பம் தருவது உண்மை. ஆனால், என்மீது இந் நிலவு நெருப்பைத்தான் வாரிக் கொட்டுகிறது. (சிரித்து என்ன அம்மா கூறுகிறீர்கள்? நிலவு நெருப்பைக் கொட்டுகிறதா? அதோ! நீலக்கடல் குளிர்ந்த நிலவைக் கண்டதும் தன் வெண்மையான அலைக்கரங்களால் அவனை 'வா வா என்று அழைப்பது தெரியவில்லையா? அம்மட்டோ! வாய்விட்டுக் கூப்பிடுவதுக்கூடக் கேட்கிறதே! (கடல் அலை முழங்குகிறது) திரிசடை, மறந்திருக்க முயலும் என்னை நினைவூட்டித் துன்பப்படுத்துகிறாயா? நான் உனக்கு என்ன தீமை செய்தேன்!