பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிவு 243 திரி : சீதை திரி : சீதை திரி சீதை சீதாபிராட்டியாரே, ஒன்றுமே விளங்கவில்லையே! கடல் ஒலியைக் கேளுங்கள் என்று தானே கூறினேன்? இதில் தவறு என்ன இருக்கிறது? வருத்தப்படாதே அம்மா! என் துயரத்தால் உன்னைக் கடிந்துகொண்டேன். இந்தப் பாழுங் கடலைப் பார்க்குந்தோறும் அந்த நீலமேக சியாமளருடைய நினைவல்லவா வருகிறது. சாதாரணமாகப் பிரிந்துள்ளவர்கட்கே இக் கடலும் நிலவும் பகையாகும். அதிருக்கட்டும். இந்தக் கடல் ஏன் ஓயாது அலறிக்கொண்டே இருக்கிறது ஒரு வேளை. (மறுபடியும் கடல் முழங்குகிறது) என்ன அம்மா, ஒரு வேளை என்கிறீர்கள்? கடல் ஒலிப்பது இயற்கைதானே? இதில் ஒரு வேளை என்ன இருக்கிறது? " . . . . . .

திரிசடை, எனக்கு ஒர் எண்ணம் உண்டாயிற்று. இக்

கடலுக்கும் உறக்கம் இல்லை; எனக்கும் உறக்கம் இல்லை. நானும் புலம்புகிறேன். இதுவும் ஓயாமல் புலம்புகிறது. ஒருவேளை என் துயரத்தைக் கண்டுதான் இது வருந்துகிறதா? அல்லாவிடில் இக் கடலையும் யாராவது. என்ன பிராட்டியாரே, மயக்கமா? கடலை யாராவது. என்று இழுக்கிறீர்களே! என்ன என்று விளக்கமாகக் கூறுங்களேன்? -

சொல்லக்கூட வெட்கமாய் இருக்கிறது! இந்தக் கடலையும் இராவணன் இதன் காதலனிடமிருந்து பிரித்து எடுத்து வந்து சிறை வைத்துள்ளானா?

தெ.ந.-18