பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தநாதன் 249 2 (திருக்கோவலூர் அரண்மனை : முத்தநாதன், மெய்ப்பொருள் நாயனார், அவர் மனைவி, காவலர்கள்) காவலன் 1 : வருக! வருக! அடியவரே, நுமது வரவு நல்வரவாகுக! உள்ளே எழுந்தருள்க! முத்த நல்லது! மகனே, இறைவன் திருவருள் உனக்குக் கிட்டுவதாக! - காவலன் 2 : வருக! பெருமானே, உள்ளே செல்லலாம். முத்த நல்லது! அங்ங்னமே ஆகட்டும். தத்தன் : அடிகளே, வணக்கம்! நீங்கள் யார்? முத்த : அன்பனே, மெய்ப்பொருளினுடைய அரண் மனையிற்கூட அடியார்களை யார் என்று கேட்கும் வழக்கம் பரவிவிட்டதா? யான் உள்ளே செல்கிறேன் அரசரைப் பார்க்க. - தத்தன் : சுவாமி, சந்தர்ப்பம் தெரிந்து செல்ல வேண்டாவா? சடாமுடியுடன் உடம்பெல்லாம் விபூதி தரித்துள்ள நீங்கள் அரசர் உறங்கும் நேரத்தில் அந்தப்புரம் செல்வது முறையா? முத்த யாரடா நீ, என்னைத் தடுக்க முயல்கிறாய்! மெய்ப் பொருளுக்கு உறுதி கூறுவதற்கு வந்துள்ள என்னை அற்பனாகிய நீயா தடுப்பது.? தத்தன் : சுவாமி, மன்னித்துக்கொள்ளுங்கள்! நானாவது உள்ளே சென்று பார்த்து வருகிறேன். முத்த வேண்டா! அடியார்கள் எப்பொழுதும் உள்ளே வரலாம் என்பது உங்கள் அரசருடைய ஆணை யல்லவா? நீ நில், நானே செல்கிறேன். (அந்தப்புரத்தில்) மெய். மனைவி : நாதரே, உறங்குகிறீர்களா? நாதரே, நாதரே.