பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தநாதன் 253 தத்தை : தெரியாமல் என்ன? தெரிந்துங்கூட அவர் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டாராம்? முத்த ஏது! நேரில் கண்டவள் போலக் கூறுகிறாயே? தத்தை நம் ஒற்றன்தான் அதையுங் கூறினான். முத்த தெரிந்துமா மெய்ப்பொருள் சும்மா இருந்து விட்டானாம்? ஒருவேளை பேடித்தனத்தாற்கூட அப்படி இருந்திருக்கலாம்? தத்தை தயைகூர்ந்து பெரியவர்களை அப்படி வாய் கூசாமல் பேசாதீர்கள்? - முத்த நம் பகைவனிடம் உனக்கு இவ்வளவு மரியாதையா? தத்தை அவர் செய்த அருஞ்செயலைக் கேட்ட பிறகு மரியாதை உண்டாகாமல் என்ன செய்யும்? முத்த என்ன அப்படிப்பட்ட அருஞ்செயல் செய்தானாம்? தத்தை : தம்மைக் குத்திக் கொன்றவனை உடனே காவலாளி கொல்ல வந்தானாம். அவனைத் தடுத்துக் குத்தினவனை அவன் ஊர் வரையிற் கொண்டு போய் விட்டுவரச் செய்தார் என்றால். அத்தகைய மனப் பண்பு யாருக்கு வரும்? - முத்த எப்படியும் குத்தியவன் தன் காரியத்தில் வெற்றி பெற்றுவிட்டான்! - தத்தை : நீங்கள் கூறுவது தவறு! குத்தியவனை மெய்ப் பொருளே வென்றுவிட்டார்! முத்த எப்படி? தத்தை : அடியார்கள் எது கேட்டாலும் தந்துவிடுவது என்று தாம் கொண்ட கொள்கையை நிலை நிறுத்திவிட்டார், மெய்ப்பொருள். ஆகவே, வெற்றியும் பெற்றார்.