பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 முத்தநாதன் முத்த ஐயோ! வேண்டா! என்னை விட்டுவிடு! இதோ ஓடிவிடுகிறேன்! இனி இந்தப் பக்கமே தலை காட்ட மாட்டேன்! தத்தன் : வஞ்சகனே, அடியார் வேடத்தில் வந்தால் மெய்ப்பொருளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்துத்தானே வந்தாய்? முத்த தத்தா, என்னை விட்டுவிடு! தயை கூர்ந்து விட்டுவிடு! - தத்தன் : அட பாவி, விளக்கு இருளைப் போக்கு வதானாலும், திரி கறுப்பாய் இருப்பது போல, வெளி உடல் மட்டும் அடியாருக்குரிய விபூதி அக்கமணி முதலியவற்றை அணிந்திருந்தாலும் உன் உள்ளம் வஞ்சகத்தால் நிரம்பி இருக்கிறதே! உனக்கு இந்த வேடம் தகுமா? - முத்த ஐயோ! சொல்லால் என்னைக் கொல்ல வேண்டா! வாளாலாவது கொன்றுவிடு! தத்தன் : இல்லை, உன்னைக் கொல்ல வேண்டா என்பது எங்கள் அரசரது ஆணை. வா, உன்னைக் கொண்டுபோய் ஊரின் எல்லையில் விட்டுவிட்டு வருகிறேன். - முத்த ஒருவேளை ஊருக்கு வெளியே அழைத்துச் சென்று என்னைக் கொலை செய்துவிடுவாயா? . தத்தன் : முத்தநாதா, உன்னைப் போன்ற வஞ்சகன் அல்லன் நான். அரசரது ஆணையை மீறமாட்டேன். மேலும், அவர் போகும் தன் உயிரைத் தாங்கி யிருப்பார். - முத்த எதற்கு?