பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 தெள்ளாற்று நந்தி நந்தி தம்பி, இளநந்தி! தாய் நாட்டின்மேல் படையெடுத்து வந்த பகைவனை முறியடிப்பதைக்காட்டிலும் பெருந் தொண்டு வேறு யாதுளது? சக்கரவர்த்தி அவர்கள் கருத்துப்படி நாட்டுக்கு நன்மை செய்பவர்கள் போர் வீரர்கள் அல்லரே! : தவறு, வீரர்களே பெரு நன்மை புரிபவர். இதில் ஐயம் என்ன?

ஏன்? நம் ஆட்சியில் அது வேறுவிதம். உதாரணமாகப்

புலவர்கள் வீரர்களைவிட அதிக மரியாதைக்கு உரியவர்கள் என்று தெரிகின்றதே! நந்தி : தம்பி, புலவர்களையும் தமிழையும் ஒதுக்கி விட்டுப் இள பேசு. அவர்கள் புரியும் தொண்டை இந்த முறையில் அளவிட்டுப் பேசுதல் ஆகாத காரியம்.

(ஆத்திரத்துடன்) ஆம்! பாடல்கள் பாடிப் பரிசில்

பெற்றே நாட்டுத் தொண்டு செய்கிறார்கள். பாடல்கள் பாடி அரசரை மகிழ்விப்பதால் வீரர்களைவிட அதிக நாட்டுப்பற்றும் அதிகத் தொண்டும் செய்கிறார்கள். ஆகவே, அவர்களே நாட்டைக் காப்பவர்கள் என்றுதான் நானுங் கூறுகிறேன். புலவர் : (சிரிப்புடன் இளவரசே தொண்டு செய்கிறோம் என்று நாங்கள் என்றுமே கூறினதில்லையே! நந்தி

இளநந்தி! ஏன் இத்துணைச் சீற்றம் கொள்கிறாய் கவிஞர்களிடத்து? நீயும் நானும் அழியினும் புலமை என்றும் வாழும். நம் வெற்றியுடன் நாமும் சேர்ந்து அழிந்துவிடுவோம். தெள்ளாற்றுப் போரில் வெற்றி கிடைத்தவுடன் குருக்கோட்டைப் போரை மறந்து விட்டோம். மக்களும் அப்புகழ் பெற்ற போரை