பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெள்ளாற்று நந்தி 17 இள : மறந்துவிட்டார்கள். நம் வெற்றியெல்லாம் இப்படித் தான். உயிரைவிட்டு நாம் இவ்வாறு பெற்ற வெற்றியைவிட, அரண்மனையிலிருந்து கொண்டே கவிபாடும் இவர்கள் வெற்றி பெரிதுபோலும், நந்தி , தம்பி உண்மைதான். நீயும் நானும் மறக்கப் பட்டு, நம் வெற்றிகளும் பொய்யாய்க் கனவாய்ப் பழங் கதையாய்ப் போன பிறகும் பெருந்தேவனாரின் பாரதம் தமிழ்கூறும் நல்லுலகில் நின்று நிலவத்தான் போகிறது. இன்னுமொன்று கூறுவேன் கேள். இத் தண்டமிழ் நாட்டைப் பல்லவர்கள் ஆள்வதற்குப் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரே ஆட்சி செய்த சோழன் கரிகாலன், பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் முதலானோர் பெற்ற வெற்றிகளை நினைத்துப் பார்த்தால், அந்த வெற்றிகளை நம்முடைய வெற்றியோடு ஒப்பிட்டுப் பார்த்தால், நாம் பெற்றதை வெற்றியாகவே கூறமுடியாது. கங்கை வரை சென்று இருக்கின்றான் கரிகாலன். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனும் சேரன் செங்குட்டுவனும் கங்கை வரை சென்று வந்துள்ளனர். ஆனால், இன்று அவர்கள் பெற்ற வெற்றியோ, அவர்கள் ஆக்கிய பேரரசோ இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. ஆனால், கரிகாலன் காலத்தில் புலவர் உருத்திரங்கண்ணனார் பாடிய பட்டினப்பாலையும், செங்குட்டுவனைப்பற்றி இளங்கோவடிகள் பாடிய சிலப்பதிகாரமும் இன்றும் இருக்கின்றன. இந்த மாபெரும் மன்னர்களைப்பற்றி இன்று நாம் அறிந்து கொள்வதற்கு, ஏன் அவர்கள் பெயர் நிலைத்து நிற்பதற்குக் கூட, இப் பெரும்