பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெள்ளாற்று நந்தி 21 நந்தி சரியன்று. இவற்றின் உண்மையை அறிவதும், இவை யாரிடம் குடிகொண்டுள்ளன என்று சிந்திப்பதும், இவற்றைப் போக்குவதற்கு வழிகள் யாவை என்று நினைப்பதும் என்னுடைய கடமை என்பதை நான் மறவேன். : அமைச்சரே, பகைவர்களைப்பற்றி நீர் சிந்திப்பதை நாமும் வரவேற்கின்றோம். ஆனால், ஓயாமல் இதனையே சிந்திப்பதன்மூலம் நண்பர்களையும் பகை வர்களாகக் காணும் காமாலைப் பார்வையைப் பெற்றுவிட வேண்டா. அமை : அரசே, மறுபடியும் மன்னித்தருள வேண்டுகிறேன். தங்களைப் போன்ற பண்புடையாளர் அருகேயிருக் கின்ற காரணத்தால் அத்தகைய காமாலை நோக்கு எனக்கு வாராது என்றே நினைக்கின்றேன். என்றாலும் கவனக் குறைவு ஏற்படாமல் இருக்கவே விரும்புகிறேன். 竇 竇 資 இளநந்தியின் காதல் பரத்தை செல்வியின் வீடு) (தோழி, செல்வி) செல்வி : தோழி, என் மனம் ஒரு நிலையில் இல்லை. எங்கே, அந்தப் பாடலைப் பாடு கேட்கலாம்? தோழி : (பாடுதல்) செந்தழலின் சாற்றைப் பிழிந்து செழுஞ்சீதச் சந்தனமென் றாரோ தடவினார்-பைந்தமிழை ஆய்கின்ற கோன்நந்தி ஆகம் தழுவாமல் வேகின்ற பாவியேன் மெய். (பாட்டு முடிந்ததும் கதவு தட்டப்படும் ஓசை) செல்வி : தோழி! அவர் வந்துவிட்டாரடி: