பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 0 தெள்ளாற்று நந்தி தோழி : இதோ போய்க் கதவை திறக்கிறேனம்மா! இளநந்தி உள் வருதல்) செல்வி : இளவரசே இத்தனை நாட்கள் கழித்தாவது என் நினைவு தங்கட்கு வந்ததே ? இள : கண்ணே, செல்வி, உன் நினைவு வந்ததா என்றா கேட்கிறாய்? இல்லை, உறுதியாக உன் நினைவு அறவே வரவில்லை. . செல்வி : பொய்க் கோபத்துடன் பார்த்தீர்களா, தெரியும் எனக்கு என்ன இருந்தாலும் கட்டிய மனைவி மங்கை இருக்கும்போது என்மேல் எவ்வாறு நினைவு வரும்: . என்னைத் தொடவேண்டா. - இள : அடி பைத்தியமே! உன் நினைவு வந்ததா என்றல்லவோ நீ கேட்டாய்? உன்னை மறந்தால் அல்லவோ நினைப்பதற்கு? என் பிறவிப் பகைவன் நந்திவர்மப் பல்லவனை மறந்தாலும் உன்னை நான் மறப்பேனா? பால் புளித்து, பகல் இருண்டு, நால் வேதமும் நெறி தவறினாலும் உன்னை யான் மறவேன். இது உறுதி. . செல்வி : காதலா! ஏன் இவ்வளவு கலக்கம் இன்று? - திடீரென்று சக்கரவர்த்தியின் நினைவு வரக் காரணம்? இள : காதலி! இன்று அந்த அறிவிலி, அரசவையில் என்னை அவமதித்துவிட்டான் கண்ணே! செல்வி : ஆ தங்களை மன்னர் அவமதித்தாரா? நம்ப . முடியவில்லையே? இள : ஆம் செல்வி எனக்குமுன் அந்தப் பெருந்தேவன் என்ற புலவனுடைய பாடலைக் கேட்டுப் பல்லை இளித்துவிட்டு, அவனுக்குப் பரிசிலும் தந்து பாராட்டிய பிறகுதான் எனக்கு மரியாதை