பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெள்ளாற்று நந்தி 23 செய்தான். ஆம், அந்த அறிவிலியைப் பல்லவ அரியணையிலிருந்து எவ்வாறாயினும் இறக்கிவி, வேண்டும். இன்றேல் யான் "பிறந்தும் பிறவாதவலே " செல்வி : இளவரசே சினந் தணிக நடைபெறக் கூடாக இள செயலுக்கு ஏன் இப்படி மனத்தைப் புண்ணாக்கிக கொள்கிறீர்கள்? செல்வி! என்ன கூறினாய்? யாரைப் பார்த்துக் கூறினாய்? இளநந்தியை யாரென்று நினைத்து விட்டாய் இரும்பின் வலியை அதன் சிறிய வடிவைக் கொண்டு ஆராயப் போகிறாயா? ஆற்றின் வேகத்தை அதன் அகலங் கொண்டு கணிக்கப் போகிறாயா? புலியின் பாய்ச்சலை அதன் உடம்பில் உள்ள வரிகளைக் கொண்டு கணக்கிடப்போகிறாயா? என்ன அறியாமை? செல்வி : காதலா! தங்கள் வன்மையைக் குறைத்து மதிக்க வில்லை நான். ஆனால், எத்துணை வன்மையும், மனத்திடமும் இருப்பினும், காலம், இடம் என்பனபற்றிச் சிந்திக்க வேண்டாவா? 'பகல் வெல்லும் கூகையைக் காக்கை, இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது" என்றும், "கால் ஆழ் களரின் நரியடும் கண் அஞ்சா வேல் ஆள் முகத்த களிறு' என்றும் அறநூலாம் குறள் கூறுவதை அவசரத்தில் ஆத்திரப்பட்டு மறந்துவிடலாமா? இன்றைய நிலையில், பல்லவச் சக்கரவர்த்தியின் வெற்றியும், செல்வாக்கும் இமயத்தையொத்து உயர்ந்து நிற்கின்றன. எளிய பகைவனாக இருந்தால் கூட அவனை வெல்வதற்குக் காலம் பார்க்கவேண்டு மென்று குறள் கூறுகிறதே, வலிமை மிக்க கூகையைக்கூட பகல் காலத்தில் காக்கை வென்று விடும் என்றல்லவா அறநூல் பகர்கின்றது. அப்படி தெ.ந.-3