பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 தெள்ளாற்று நந்தி இள : ஒரு புலவனைப் பிடித்து நந்தியின்மேல் ஒரு கலம்பகம் பாடச் செய்தேன். செல்வி : யூ இவ்வளவுதானா? போயும் போயும் புரட்சி செய்வதற்கு ஒரு நூலைப் பாடி முடித்துக் கொண்டு வந்தீர்களாக்கும்? இள அப் பாடல்கள் 'அறம்' அதாவது, வசை வைத்துப் பாடப்பெற்றுள்ளன. யார்பேரில் அது பாடப் பெற்றுள்ளதோ, அவன் அப் பாடல்கள் முழுவதையும் கேட்டால், உடனே இறந்து விடுவான். செல்வி : (நம்பிக்கையற்ற குரலில் ம்ம். இதெல்லாம் இக் காலத்தில் நடைபெறக்கூடியவையா? சற்று விளங்கத்தான் கூறுங்களேன்? இள : அறம் வைத்துப் பாடுவது என்றால், ஒரு பாட்டில் சில சொற்களில் இரண்டு பொருள்படும்படி அமைத்துப் பாடவேண்டும். உதாரணமாக ஒரு பாட்டில் உலகுடையான் திருமுடியும் என்று வருகிறது. சாதாரணமாகப் பார்ப்பவர்களுக்குத் திருமுடியும் என்ற சொல்லுக்குக் 'கிரீடம் என்ற பொருள்தான் விளங்கும். ஆனால், திருமுடியும் என்பதன் பொருள். அரசனுடைய செல்வம் அழியும்' என்பதாகும். கரியாய் நின்ற மன்னா என்றால், "சாட்சியாய் உள்ள அரசே எனப் பொருள் காண்பர் படிப்பவர். ஆனால், எரிந்து சாம்பலான அரசனே என்று பொருள்படும் இச்சொல். அப்படி நூல் முழுவதும் வசை வைத்துப் பாடப்பட்டுள்ளது. செல்வி : (அச்சத்துடன்) ஐயோ, இதை அரசர் முன் சென்று பாடச் செய்வதா? - - இள அஞ்சாதே. நம் இருவரையும் தவிர ஒருவர்க்கும் இவ் வுண்மை தெரியாது. உன் தோழிக்கு இப் பாடல்