பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெள்ளாற்று நந்தி 29 களுள் சிலவற்றைக் கற்றுக்கொடுத்துப் பாடச் செய். நம் காரியம் விரைவில் கை கூடும். யாரும் நம்மேல் ஐயங்கொள்ள மாட்டார்கள். காரியம் முடியும்வரை யான் இத் துறவியின் கோலத்திலேயே இருப்பேன். செல்வி : இளவரசே! என் உடல் பதறுகிறது. இச்செயலை இள நினைந்துகூடப் பார்க்க முடியவில்லை என்னால். அஞ்சாதே செல்வி. அதனால் நமக்கு வருவது தீமையன்று, நன்மையே. உன் தோழிக்கு இப் பாடல்களை முழுவதும் கற்றுக்கொடுத்துப் பாட வை. கற்றுச்சொல்லியையும் ஏற்பாடு செய்திருக் கிறேன். செல்வி : (நடுங்கும் குரலில் இளவரசே பாவ காரியத்தில் நாம் ஈடுபட்டுத்தான் பட்டமும் பதவியும் அடைய வேண்டுமா? வேண்டா இளவரசே சொல்ல முடியாத அச்சத்தால் என் உடல் நடுங்குகிறது.

செல்வி, காரியம் கைகூடும் நேரத்திலா கலங்குவது?

யாரும் நம்மேல் ஐயங்கொள்ள மாட்டார்கள். கவலையை விடு. நான் சொல்லும் திட்டப்படி நடந்து கொண்டால் போதும். பயன் தானாகவே நம்மைத் தேடி வரும். செல்வி : எனக்கென்னவோ அச்சமாக இருக்கிறது. இள இளவரசே. காரியத்தில் ஈடுபாடு ஏற்பட்டால் அச்சம் தானாக அகன்றுவிடும் செல்வி. இதோ கேள். அரசரின் பிறந்த தினத்தன்று நீ அவர் முன் நாட்டியமாட வேண்டும். உன் தோழி கலம்பகப் பாடல்களைப் பாட அதற்கேற்ப அபிநயம் நீ பிடிக்கவேண்டும். இதுதான் திட்டம். . . . .