பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 தெள்ளாற்று நந்தி நந்தி ുങ്ങഥ நந்தி:

அவ்வாறே ஆகட்டும் அமைச்சரே. இரவு பத்து நாழிகைக்குப் புறப்படுவோம்.

இரவு நந்தி, அமைச்சர்) முன்னணியில் இசைப்பாடலின் ஒலி)

(தணிந்த குரலில் அரசே, அதோ தெரிகின்றதே,

அதுதான் இளநந்தியின் காதற்பரத்தை செல்வியின் வீடு. அங்கிருந்துதான் இவ்வினிய இசை வருகிறது. இசைக்குரிய நேரமல்லவே இது. எதற்கும் வாருங்கள் நெருங்கிச் சென்று கேட்போம். அமைச்சரே, காதற்பரத்தையின் வீட்டில் இசையைக் கேட்க இரவிலா வரவேண்டும்? சரி, கலையை அனுபவிக்கக் காலம் பார்ப்பது தவறுதான். (விட்டுள்ளிருந்து பாடல் கேட்கிறது) (மாயாமாளவம்) மலர்ச்சூழல் அமர்ந்தினிய வண்டார்க்கும் காலம் வரிக்குயில்கள் மாவிலிள ந் தளிர்கோதும் காலம் சிலர்க்கெல்லாம் செழுந்தென்றல் அமுதளிக்கும் காலம் தீவினையேற் கத்தென்றல் தீவீசும் காலம் பலர்க்கெல்லாம் கோன்நந்தி பன்மாடக் கச்சிப் பனிக்கண்ணார் பருமுத்தம் பார்த்தாடும் காலம் அலர்க்கெல்லாம் ஐங்கணைவேள் அலர்தூற்றும் காலம் அகன்றுபோ னவர்நம்மை அயர்த்துவிட்ட காலம். நந்தி : அமைச்சரே, கேட்டீரா பாடலை? ஆ. இதுவன்றோ கவிதை? இத்தகைய பாடலை என்மேல் பாடவல்ல ஒரு புலவன் இந் நாட்டவனா? இத்தகைய புலவனைக் காணாமற் கழித்த நாட்கள் அத்தனையும் வீணே ஆ இதோ பாடல் தொடர்கிறது. கேட்போம்.