பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 தெள்ளாற்று நந்தி தோழி : யாரய்யா? சேவகன் : அரண்மனைச் சேவகர்கள், இதுதானே இளநந்தியின் காதற்பரத்தை செல்வியின் வீடு? தோழி : ஆமாம் என்ன வேண்டும் உங்களுக்கு? சேவகன் . உடனே உங்கள் தலைவியை அழைத்து வரும் படி அரசர் ஆணை. г . தோழி : (சற்று மகிழ்ச்சியுடன்) அரசரா அழைத்து வரச் . சொன்னார்? - சேவகன் : ஆம். காலம் தாழ்த்தக்கூடாது. உடனே வர வேண்டும். . தோழி : சற்று இருங்கள். (உள்ளே பேசும் குரல்) அம்மணி, அரசர் உங்களை உடனே அழைத்து வரச் சொன்னாராம். அரண்மனைச் சேவகர்கள் வாயிலில் காத்துக்கொண்டிருக்கிறார்கள். செல்வி : (கலவரத்துடன்) ஹா. அரசரா? அழைக்கிறாரா?. f . தோழி : ஏன் அம்மணி திடீரென்று இந்தக் குழப்பம்: உங்கள் நாட்டியத் திறமையைக் கேள்விப்பட்ட பிறகு, அவருக்குத் தன் பிறந்த தினம்வரை காத்திருக்கப் பொறுமையில்லைபோல் இருக்கிறது. இன்றே உங்கள் கலையை அனுபவிக்க விழைகிறார். செல்வி : (அதே கலவரத்துடன்) அங்கயற்கண்ணி, நீ. காரணம் கேட்டாயோ? தோழி : சேவகர்கள் காரணம் சொல்லவில்லை அம்மணி. ஆனால், காரியம்மிக்க அவசரமானது என்று அவர்கள் பதட்டத்திலிருந்து தெரிகிறது. செல்வி : (பதட்டத்துடன்) நான் என்ன செய்வேன்? இளவரசர் இளநந்தியும் இங்கு இல்லையே.