பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெள்ளாற்று நந்தி 41 இடம்: காஞ்சியில் ஒரு தெரு) (புலவர், அமைச்சர்) புல : அமைச்சரே! எங்கே இவ்வளவு அவசரமாகப் புறப்பட்டீர்? மன்னருக்கு மனமாற்றம் தர ஏதாவது வழி கண்டீரா? அமை : புலவரே! விதியை வெல்ல யாராலும் இயலாது என்பதை நாள்தோறும் கண்டுகொண்டே வருகிறேன். 'ஊழில் பெருவலி யாவுள' மற்றொன்று சூழினும் தான் முந்துறுவதன்றோ அது? மன்னரிடமிருந்து கயவன் இளநந்திக்கு ஒலை கொண்டு செல்கிறேன். புல : என்ன? என்ன? ஒருசிறிதும் மன்னர் மனம் மாறவில்லையா? இளநந்திக்கு ஒலை அனுப்புகிறாரா? பாம்புக்குப் பால் வார்க்கின்றாரா? என்னதான் ஒலையில் எழுதி இருப்பார்? அமை : அறம் வழுவாச் சிங்கம் அமர்ந்த அரியணையை அறிவிலிக்கு உடமையாக்குகிறது இந்த ஒலை. புல என்ன கொடுமை இது? இளநந்தியின் விருப்பம் நிறைவேறிவிட்டதா? அமை : நான் ஐயுற்றது உண்மையாகிவிட்டது. மன்னரின் தமிழ்ப் பற்றை வைத்துக்கொண்டு தன் காரியத்தைச் சாதித்துவிட்டான். புல அமைச்சரே, நந்திவர்மரின் பெருந்தன்மையை உணராமல் இக் காரியம் செய்துவிட்டானே! இருந்தாலும். அமை : காரியம் மிஞ்சிவிட்டது புலவரே, இனி. புல : இல்லை-எனக்கு ஒன்று தோன்றுகிறது. இள நந்தி வீண் நாடாசையில் செய்த தவறுதான் இது. தவறு செய்தவனையே தவற்றை உணரும் படி செய்துவிட்டால். ஆம், அதுதான் சரி. அவன்