பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெள்ளாற்று நந்தி 43 செங்கைமுகில் அனையகொடைச் செம்பொன்பெய் ஏகத் தியாகியெனும் நந்தியருள் சேராத காலம் அங்குயிரும் இங்குடலும் ஆனமழைக் காலம் அவரொருவர் நாமொருவர் ஆனகொடுங் காலம். பலர் : ஆ! இதோ, அதோ.. பச்சைமட்டை பற்றி எரிகின்றதே? பெருந்தேவ அமைச்சரே, இதென்ன கொடுமை? யாரோ அறம் பாடிவிட்டார்கள். அதனால்தான் பச்சை மட்டைப் பந்தல் பற்றி எரிகிறது. அமை : பெருந்தேவனாரே, இந்தப் பாடலில் அரசர்க்குத் தீங்கு ஏற்படும் என்றுமட்டும் எனக்குத் தெரிகிறது. என்ன செய்யலாம்? அதோ, அதோ, செல்வி ஓடி வருகிறாள். செல்வி : தூரத்திலிருந்து நிறுத்துங்கள், நிறுத்துங்கள், பாடுவதை நிறுத்துங்கள். பலர் : யாரது? ஒரு பெண் அல்லவா ஒடி வருகிறாள்? சேவகன் 1 : இவளா? சேவகன் 2 : இவள். இளநந்தியின் காதல் பரத்தையல்லவா? செல்வி : அரசே! மன்னிக்கவேண்டும். இப் பாடலை இனிக் கேட்க வேண்டா. நந்தி : (கேலிச் சிரிப்புடனும், அசதி நிறைந்த குரலுடனும் செல்வி, ஏன் பதறுகிறாய்? இளநந்தி வந்து விட்டானா? செல்வி : அரசே! விஷப் பரீrை செய்ய வேண்டுமானால், அதற்கும் ஒரு எல்லை வேண்டாவா? தயைகூர்ந்து பொறுத்தருளுங்கள். அரண்மனை திரும்பலாம்.