பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாப விமோசனம் மூலக் கதை "புதுமைப் பித்தன்" (புதுமைப் பித்தன் துணைவியாரின் அனுமதியுடன் நாடகமாக்கப் பெற்றது) பாத்திரங்கள்: கோதம முனிவர் அகலியை இராமன் விசுவாமித்திரன் சீதை சதானந்தன் ஜனகன் கைகேயி இந்திரன் - (கோதம முனிவன் மனைவி அகலியை, அறியாமை காரணமாக, உள்ளத்தில் தவறு இல்லாமல் உடலால் தவறு இழைத்ததைப் பலரும் அறிவர். இராமனுடைய கால்பட்டவுடன் அவள் சாபம் நீங்கிக் கல்லுருவம் மாறி, மீட்டும் கணவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டாள் என்று பழங்கதை பேசிச் செல்கிறது. அதற்குமேல் கோதமன் அகலியை வாழ்க்கை எவ்வாறு நடைபெற்றிருக்கும் என்பதைக் கற்பனைக் கண்கொண்டு கதையாகத் தீட்டியுள்ளார் மூல ஆசிரியர்) அடர்ந்த பெருங்காட்டில் அழகிய கற்சிலை ஒன்று கிடக்கிறது. அழகு வடிவமான அந்தப் பெண் சிலையின் அருகே ஒரு கரையான் புற்று வளர்ந்திருக்கிறது. மோனத்தில் ஆழ்ந்து தன் நினைவு அகற்றித் தவம்