பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாப விமோசனம் 49 கிடக்கிறான் கோதமன். அன்னை கங்கை அனைத்தையும் அறிந்திருந்தும் மெல்லிய ஓசையால் தன் உள்ளக் கருத்தை அறிவித்தபடி ஒடிக்கொண்டிருக்கிறாள். இவ்வாறு பல்லாண்டுகள் கழிகின்றன. தசரதனிடம் சென்ற விசுவாமித்திரன் நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி' என்று கேட்டு, இராமனை அழைத்துக் கொண்டு இக் காட்டு வழியே வருகிறான். அவர்கள் வரும் அந்த வேளையில்...! (இடம்: காடு) (இராமன், விசுவாமித்திரன், கோதமன், அகலியை) இராமன் : விசுவாமித்திர முனிவரே! அதோ ஒரு கரையான் புற்றும், அதன் பக்கத்தில் ஒர் அழகான சிலையும் இருப்பதைக் கண்டீர்களா? இந்த நடுக்காட்டில் அழகே வடிவான இந்தச் சிலை எவ்வாறு வந்தது? விசுவா : (ஆழ்ந்த சிந்தனையுடன்) (தனக்குள் பேசுவதுபோல் இராமா! தாடகையைக் கொன்ற பொழுது நின் கைவண்ணம் அங்குக் கண்டேன். இனி நின் கால்வண்ணம் இங்குக் காணப்போகிறேன். (உரக்க விரைவில் நடந்து வா என் செல்வமே! இரா : இதோ வந்துவிட்டேன். (திடீரென்று சிலை பெண்ணாக மாறுகிறது) ஆ! முனிவரே! ஐயனே! ஈதென்ன புதுமை ? திடீரென்று இச் சிலை பெண்ணாக மாறிவிட்டதே! எப்படி இம் மாற்றம் ஏற்பட்டது: ஒருவேளை இவ் வம்மையாரை யான் சிலை என்று முன்னர்த் தவறாகக் கருதிவிட்டேனா? - - விசுவா : அஞ்ச வேண்டா. அரசகுமாரா! நீ தவறாகக் கருதவில்லை. முன்னர்க் கல் சிலையாகத் தான் இப் பெண்ணரசி நின்றாள். அதோ.. அந்தக் கரையான் புற்றை இப்பொழுது பார்.