பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாப விமோசனம் 55 விசு

இராமச்சந்திரா இதுதான் அந்த நிகழ்ச்சி, நின்

கால்பட்ட பெருமையால் இம் மாதரசி சாப விமோசனம் பெற்றாள். இராம : கோதம முனிவரே! இப்பெருமாட்டியை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகம் இல்லை. கோத : (விசனக் குரலில்) நீ இப்பொழுது என்ன கூறுகிறாய்? இராம : ஐயனே! நான் கூறுவதில் வேறு இரண்டாவது விசு பொருள் ஒன்றும் இல்லையே. தவறாக ஏதேனும் கூறிவிட்டேனா மன்னித்தருள வேண்டுகிறேன்.

கோதமரே! இராமன் இந் நிகழ்ச்சியை அறிவுக்

கண்கொண்டு காண்கிறான். நெஞ்சால் தவறு இழைக்கவில்லையே அகலியை. பிறன் ஒருவன் அவளை ஏமாற்றினான். ஏமாற்றப்படுவது ஒரு குற்றமா? கோத : இராமனுடைய தார்மீகமான அறிவைக் கொண்டு கோத விசு அறத்தை ஆய்ந்தால் அவன் கூறுவது சரிதான். ஆனால், அனுபவம் என்னும் சாணையில் பட்டை திட்டப்படாத அவனுடைய முடிவுகளை, அனுபவத்தாலும் தவத்தாலும் மிக்கவராகிய தாங்கள் ஏற்றுக்கொள்வதுதான் விந்தையாக இருக்கிறது. அனுபவ வழியில் பார்த்தாலும் இதுவே முடிவு. அகலியையிடம் இன்னும் நீர் அழியாக் காதல்கொண்டு இருக்கிறீர். அவளும் அவ்வாறே இருக்கிறாள். இருவருடைய கண்களும் இதனை விளக்குகின்றன. (கலங்கிய குரலில்) அப்படியானால். அப்படியானால். நீங்கள் கூறுவதுபோலவே.

ஆம், சற்றும் யோசனை வேண்டா!

தெ.ந.-5