பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 டி சாப விமோசனம் கோத ஏதோ யோசனையில் தாராளமாகக் கேட்கலாமே. அக : நாம் இந்த இடத்தைவிட்டு அயோத்தியின் பக்கத்தில் குடிபுகுந்துவிட்டால் என்ன? கோத தாராளமாகப் போகலாம். ஏன் இராமனையும் சீதையையும் அடிக்கடி காணவேண்டும் என்ற விருப்பமா? அக அதுவுந்தான். - கோத அதுவுந்தான் என்றால், வேறு என்னவாம்? அவதூறு பேசுகின்ற மக்களிடமிருந்து போய்விடப் பார்க்கிறாயா? மற்ற ரிஷிபத்தினிகள் உன்னைப் பற்றிப் பேசிக்கொள்வதை நானும் அறிவேன். அதனால் என் மனம் சிறிதும் வேதனை அடைய வில்லையே. - அக வேதனை அடைவதற்குரிய தவறு நீங்கள் என்ன செய்தீர்கள்? (அழுகைக் குரலில்) நானல்லவோ.. கோத போதும்! அதுபற்றி மறுபடியும் பேச வேண்டா. - - . . • 彙 * (அயோத்தியை அடுத்துள்ள பர்னசாலை) . . - கோதமன், அகலியை) . கோத அகல்யே! நாம் அயோத்தியின் பக்கத்தில் குடியேறியதன் பயன் இல்லாமல் போய்விட்டது. இராமனுடைய நட்புக் கிடைக்கும் சூழ்நிலை மாறிவிட்டது. . அக என் பாபம் என்னுடன் சேர்ந்தவர்களையும் சேர்த்து - வாட்டுகிறது. இராமனும் சீதையும் காட்டுக்குப் போகவேண்டிய அவ்வளவு பெரிய தவறு என்ன செய்துவிட்டார்கள்? -