பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாய விமோசனம் ( 67 கைகேயி : (விரக்திக் குரல்) பரதன் அறம் ஒன்றுக்குத்தான் கட்டுப்படுவானே தவிர, வசிட்டருக்குக் கூடக் கட்டுப்பட மாட்டானே. அக : (கோபக் குரலில்) மனிதனுக்குக் கட்டுப்படாத அறம், மனித குலத்துக்கே பகை என்பது தான் என் முடிவு.

  • * 莺

(இடம்: காட்டில் கோதமன் பர்ணசாலை) (கோதமன், அகலியை, சீதை, இராமன்.) (தேர் ஒன்று வந்து நிற்கிறது) கோத வரவேண்டும். வரவேண்டும். இராமச்சந்திரா! வாம்மா சீதா.. என்ன மாதவம் செய்தது இச் சிறு குடில். அக : வாம்மா சீதா. உன்னைக் கண்டவுடன் என் மனம் துன்பம் நீங்கி இன்பமடைகிறது. கோத அகல்யே. இராமனும் நானும் வெளியே சென்று சற்று உலாவிவிட்டு வருகிறோம் நீங்கள் இருவரும் பேசிக்கொண்டிருங்கள். (கோதமனும் இராமனும் சென்ற பிறகு) அக : என்ன சீதா. பதினான்கு வருஷங்கள் கழித்து உன்னைப் பார்க்கும் நிலை ஏற்பட்டது. இந்த இடைக்காலத்தில் எவ்வளவு அனுபவம் பெற்று விட்டாய்! எத்தனை இடங்கள் சுற்றிப் பார்த்தாய்? சீதை : தாயே அகல்யா! எல்லாம் கனவுபோல இருக்கிறது. இலங்கையில் அசோக வனத்தில் இருந்த காலத்தை நினைத்தால் இப்பொழுதும் உடல் நடுங்குகிறது. அக : அது கிடக்கட்டும். இராமன் என்ன கூறினான் அதுபற்றி?