பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 சாப விமோசனம் சீதை : சொல்வதென்ன? அக்னிப் பிரவேசம் செய்த பிறகுதான் ஏற்றுக்கொண்டார். அக : (உச்சஸ்தாயையில் என்ன? அக்னிப் பிரவேசம் - செய்தாயா? எதற்கு? யார் செய் என்று கூறினது? சீதை : யார் கூறுவது? அவர்தான் கட்டளை இட்டார். பகைவனிடம் சிறை இருந்தபொழுது தூய்மையுடன் இருந்தேன் என்பதை நிரூபிப்பதற்கு. அக (கத்தும் குரலில் அவனா உன்னை அக்னிப் பிரவேசம் செய்யச் சொன்னான். அகலியைக்கு ஒரு நீதி, அவனுக்கு ஒரு நீதியா? இஃது என்ன ஏமாற்று: கோதமன் சாபம் குடலோடு பிறந்த நியாயமா? சீதை : (மெல்லிய குரலில் உலகத்துக்கு நிரூபிக்க வேண்டாவா? - அக கத்திக்கொண்டு உலகத்துக்கு நிரூபிக்க வேண்டுமா? உள்ளத்துக்குத் தெரிந்தால் போதாதா ? என்றைக்காவது யாராவது உண்மையை உலக்த்துக்கு நிரூபித்துக் காட்டியதுண்டா? காட்டத்தான் முடியுமா? சீதை : அதனால் தவறு ஒன்றும் இல்லையே? அக தவறு இல்லையா? அகல்யைக்கும் கோதமனுக்கும் - கூறிய நியாயத்தைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டான் தசரத குமாரன்: உலகத்துக்கு நிரூபித்துக் காட்டிவிட்ட ஒன்று உண்மையாகி விடுமா? தன் நெஞ்சு அறிந்த ஒன்றுக்கு நிரூபணம் வேறு . . . . . . இராமனும் கோதமனும் உள் நுழைகின்றனர் இராம : (தனக்குள் உம். அகல்யாதேவி கூறுவது முற்றிலும் - உண்மைதானே. அன்று கால்பட்டுக் கல்லுருவம் மாறியபொழுது, காலும் மனமும் குளிர்ந்தது. இன்று