பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 ல் கயிலாசநாதர் கோயில் சிற்பங்களை மாமல்லபுரத்தில் செதுக்கிவிட்டார்கள். நாமும் கற்கோயில்தான் கட்ட வேண்டும் என்று நினைக்கிறோம். - சிற் : கற்கோயில்தான் எழுப்பவேண்டும் என்றாலும் அந்தக் கல் கருங்கல்லாக இல்லாமல் பொறைக் கல்லாக, அதாவது மணற் கல்லாக இருந்தால் நல்லது என்று நினைக்கிறேன். அரசரின் ஆணை யாதோ? இராஜ : மணற் கல்லின் சிறப்பு என்ன? சிற் : அஃது உளிவேலைக்கு மரத்தைப் போல் எளிதாக இருக்கும். எவ்வளவு அழகான சிற்பத்தை வேண்டு மானாலும் அதில் செதுக்க முடியும். இராஜ : அப்படியே ஆகட்டும். சிவபெருமான் அமர்வதற் குரிய சகல சிறப்புக்களுடனும் அக்கோயில் அமையட்டும். விரைவில் வேலை தொடங்கட்டும். . (காலப்போக்கைக் குறிக்கும் இசை - கல்லில் உளி செதுக்கும் ஒசை - ஆரவாரம் - அரசன் வருகையைத் தெரிவிக்கும் ஓசை) . குரல் 1 : அத்யந்தகாம மகா ராஜாதி ராஜ இராஜ சிம்மப் பல்லவர் நீடுழி வாழ்க! . குரல் 2 : சிவசூடாமணி ராஜசிம்மர் நீடுழி வாழ்க! இராஜ : சிற்பாசாரியரே. கோயிலைச் சுற்றிப் பார்த்துவிட்டு X- வரலாமா? . . . . . . . . . . . . சிற் தூரத்தில் இருந்து பார்த்தால் திருக் கயிலாயத்தின் . தோற்றம்போலவே காட்சியளிக்கும் இக் கோயிலின் எதிரே உள்ள இது திருக்குளம். அதனை அடுத்து நந்தி தேவருக்குரிய சிறிய மண்டபம் பெரிய இந் நந்தியும் கல்லால் ஆகியதே. - இராஜ : தூண்கள் அனைத்தும் பல்லவ முறையில் தானே அமைத்துள்ளீர்.