பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கயிலாசநாதர் கோயில் 77 விருப்பப்படி ஏதோ ஒன்றை அமைக்கப் போகின்றாராம். இராஜ சரி. உள்ளே சென்று முக மண்டபத்தையும் இறைவன் அமரும் கருவறையையும் காணலாமா! சிற் : கர்ப்பக்கிருஹத்தைத்தானே! ஒ! காணலாமே! இந்த முகமண்டபம் இக் கோயிலுக்கு ஏற்ற அமைப்பை யுடையது. முகமண்டபத்தை அடுத்து உள்ளே கருவறையும் விமானமும் அமைக்கப் பெற்றுள்ளன. இராஜ : கருவறையில் என்ன வடிவம் அமைத்துள்ளீர்? சிற் : சக்கரவர்த்தி! சிவசூடாமணி என்ற தங்கள் பெயருக்கேற்ப சோமாஸ்கந்த வடிவத்தையே கருவறையில் செதுக்கியுள்ளேன். பார்வதிக்கும் பரமேஸ்வரனுக்கும் கந்தப்பெருமான் பிறந்தது . போலப் பரமேஸ்வரவர்மருக்குப் பிறந்ததை நினைவு கூர்தற்பொருட்டே சோமாஸ்கந்த சிற்பத்தை அமைத்துள்ளேன். இராஜ : அனைத்தும் நன்றாக அமைந்துவிட்டன. அடுத்த திங்கள் கும்பாபிஷேகத்திற்கு நாள் குறித்தாய் விட்டது. அதற்குள் எல்லா வேலைகளும் முடிந்து விடட்டும். - (இசைக் கலவை-கனவு இசை - இரவு ஒலிக்குறிப்புகள்) குரல் : என்ன இராஜசிம்மா? நாளை நீ எழுப்பிய கற்கோயிலுக்குக் கும்பாபிஷேகமாமே. இராஜ ஆம்! நீங்கள் யார்? குரல் மட்டும் கேட்கிறது. ஆனால், வடிவம் ஒன்றும் தெரியவில்லையே! குரல் : ஆம்! நான் உருவமற்றவன்தான்! ஒரு நாமம் ஒர் உருவம் ஒன்றும் இலாத எனக்கு ஆயிரம் பேர்கள் இட்டு இந்த உலகம் அழைக்கிறது.