பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 கயிலாசநாதர் கோயில் இறைவனே விரும்பிக் குடி புக நினைந்துள்ள தங்கள் கோயிலை நான் காணலாமா? பூசலார் : அரசே! நான் கட்டிய கோயில் தாங்கள் கட்டியதைப் போன்ற கற்கோயில் அன்று. தங்களை ஒத்த பேரரசர்கள் மட்டுமே கட்டக்கூடிய கற்கோயிலை ஆண்டியாகிய நான் எங்ங்னம் அமைக்கமுடியும்? பல நாள் முயன்றும் பயன் ஒன்றும் இல்லாமையால் இறுதியாக மனத்தாலேயே இறைவனுக்குக் கோயில் கட்ட முனைந்தேன். மனத்தில் கட்டிய அத் தாபரத்திற்கு இன்றுதான் குட முழக்குச் செய்ய வேண்டுமென்று நாள் இட்டிருந்தேன். உள்ளத்தையே கோயிலாகக் கொண்டு உறையும் பெருமான் என் உள்ளக் கோயிலில் குடிபுக வருகின்றான் என்பதறிந்து பெருமகிழ்ச்சி அடைகின்றேன். இராஜ செயற்கரிய செய்யவல்ல பெரியீர்! அடுத்து நான் அமைத்துள்ள கற்கோயிலுக்கும் குடமுழுக்கு நடை பெறும்போது தாங்கள் வந்து சிறப்பிக்க வேண்டும். பூசலார் : அங்ங்னமே ஆகட்டும்! காடவர் கோமான் கச்சிக் கற்றளி எடுத்து முற்ற மாடெலாம் சிவனுக் காகப் பெருஞ்செல்வம் வகுத்தல் > செய்வான் நாடமால் அறியா தாரைத் தாபிக்கும் அந்நாள் முன்னாள் ஏடலர் கொன்றை வேய்ந்தார் இரவிடைக் கனவில் - - எய்தி நின்றவூர்ப் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து • - செய்த நன்றுநீடு) ஆலயத்து நாளைநாம் புகுவோம் நீஇங்கு)