பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கயிலாசநாதர் கோயில் 87 உட்புறச் சுவர்களில் பல்லவர் வரலாறு முழுவதையும் சிற்பங்களாகச் செதுக்கியுள்ளான். அவற்றில் நந்திவர்மன் வரலாற்றைத் தெரிவிக்கும் சிற்பத்திற்கு முன்னர், அழகிய ஓர் அரசனும் அரசியும் துயரமே வடிவாக அமர்ந்திருக்கின்றனர். இறந்துபட்ட ஒருவனைத் தொட்டிலில் கிடத்தி இருவர் சுமந்து வருகின்றனர். எனவே, இது ராஜசிம்மன் மகனாகிய மூன்றாம் மகேந்திரவர்மன் இறந்ததையே குறிக்கும் என ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இறப்பதற்குமுன் மகேந்திரவர்மன் தன்னுடைய பெயரை நிலைக்கச் செய்துவிட்டான். -

  • ár * *

குரல் 1 : மகேந்திரவர்மன் கட்டிய மகேந்திரவர்மேஸ் வரத்தில் காணப்படும் கல்வெட்டுகள் அவன் தந்தையினிடம் கொண்டிருந்த பெருமதிப்பை வெளியிடுகின்றன. கு 2 : ராாஜசிம்மேஸ்வரத்தின் திருச்சுற்றிலுள்ள சிறிய கோயில்கள் அனைத்தும் மூன்றுவகையான எழுத்துக்களில் கல்வெட்டுகள் பெற்றுள்ளன. கு 3 : இச் சிறு கோயில்கள் அனைத்திலும் ராஜசிம்மனுடைய விருதுப் பெயர்களான 'பூர் ராஜசிம்ஹ என்பதில் தொடங்கி ரீ ஈஸ்வரபக்தஹ என்பது வரை 160க்கும் மேலான பெயர்களைத் தாங்கியுள்ளன. கு 4 : ராஜசிம்மேஸ்வரத்தின் உட்புறத்திலும் 40-க்கும் மேற்பட்ட விருதுப் பெயர்கள் எழுதப் பெற்றுள்ளன. கு 1 : இப் பெயர்களுள் எல்லாம் அத்யந்தகாமன் என்ற பெயர் மிகுதியும் வழங்கப்படுகிறது. தெ.ந.-7