பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 10.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 அறத்துப்பால் உயர்நிலையை உரைத்துக் காட்டமுடியும்? வீட்டில் ஒன்றும் இல்லாவிடினும் மனைவிக்கு மாண்பு மட்டும் இருந்து விட் டால், மனேக்கு வேண்டிய மற்ற எல்லாம் இருப்பதாகவே பொருள்ாம். வீட்டில் எல்லாமே இருந்தாலும் மனைவிக்கு மாண்பில்லை யால்ை ஒன்றும் இல்லாததாகவே பொருளாம். இதனே இல்ல்து என்? உள்ளது என்? என்னும் வினக்க ளால் விள்ங்கவைத்துள்ளார் ஆசிரியர் இங்கே வள்ளுவர், திட்டவட்டமாகத் தெளிவான ஒரு முடிவுக்குத் துணிந்து வந்து விட்டவராகக் காணப்படுகிருர். வேறு எது இருந்தா அம் இல்லாவிட்டாலும், குடும்பத்துக்கு உண்மையான மூலதனம் (Capital) மனைவியே-அதுவும் மாண்புமிக்க மனைவியே என்பது வள்ளுவர் கருத்து. இதனை இந்தக் குற ளில் இல்லவள் - இல்லவள் என இருமுறை கூறியிருப்ப தும், 'மாண்பால்ை 'மானுக்கடை என்னும் இருவகை உடன்பாட்டு. எதிர்மறை எச்ச முடிவுகளும் உணர்த்தி கிற்கின்றன. வன்ருே மாண்பால்ை, மாணுக்கடை என்ப வற்றின் இறுதியில் உள்ள 'ஆல்', 'கடை என்னும் இரண் டும் ஒருவகை வினையெச்ச விகுதி முடிவுகளாம். (Adverbial clause) இனி இக்குறட் கருத்தைச் சிறிது விளங்க நோக்கு வாம்:- வீட்டில் போதிய பொருள்கள் இல்லாவிடிலும், போதிய திறமையும் ஊக்கமும் உடைய மனைவி, எல்லாம் இருக்கும் வீட்டைவிடத் தன் குடும்பத்தைச் சீர்திகழச் செய்வாள்; திறமையும் ஆர்வமும் இல்லாதவளோ, எல்லாம் இருப்பினும், ஒன்றும் இல்லாத விட்டை விடத் தன் குடும் பத்தைப் பாழ்படுத்துவாள். முன்னவள் செட்டாகப் புதிய பொருள்களைச் சேகரிப்பாள் - நீண்டநாள் வைத்துப் படைப்பாள்: பின்னவளோ, புதிய பொருள்களைச் சேகரிப் பதுஞ் செய்யர்மல் உள்ள பொருள்களையும் விரைவில் அழித்து ஒன்றும் இல்லையாக்குவாள். முன்னவள், விட் டிற்கு விருந்தினர் வந்தால், குறைந்த பொருளைக்கொண்டே பலவகைக் கறிகள் செய்து உணவு படைப்பாள்; பின்ன வளோ, எல்லாம் இருப்பினும், இரண்டொன்றும் சரியாய்ச் செய்யாது கடனைக் கழித்தனுப்புவாள். முன்னவள். தன் ஏழைக் கணவன் இன்று காய் கறி வாங்கக் காசு இல்லையே