பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 6.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைமாட்சி 9 பொருமையுடன் போட்டியிட்டுப் போர் செய்து கொள் கின்ற இந்த உலகமுங்கூட, இன்சொலால் ஈத்தளிக்க வல்லானுக்கு அடங்கிக் கட்டுப்படும், என்னும் துண் பொருளே இந்த இ (இவ்வுலகு) என்ற ஒரு சுட்டெழுத்து அறிவிக்கவில்லையா? 'தன் சொலால்' என்பது தான் சொல்லுகிறபடி நடக்கும் என்பதைக் குறிக்கிறது. அவர் சொல்லுக்கு அங்கே நிறைய மதிப்பு உண்டு', 'அவர் சொல்லுக்கு அங்கே இரண்டாவது இல்லே', 'அவர் சொன்னல்போதும்', அ வர் சொன்னல் சொன்னதுதான்', 'அவர் ஒரு வார்த்தை சொன்னுல் போதும் ஆகிய உலக வழக்குக்கள் இதே கருத்தை அறிவிப்பனவேயாம். அடுத்து, தான் கண்டனைத்து' என்பது. தான் கருது கிறபடி-எண்ணுகிறபடியே உலகமும் நடக்கும் என்பது இதன் பொருள். இங்கே உளநூல் (Psychology) கருத்து ஒன்று என் உள்ளத்தை உங்துகின்றது. அதனைச் சுருங்கத் தருகிறேன்:- மக்களுக்கு இளமையிலிருந்தே-இயற்கை யிலேயே சில பொதுவான மனப்போக்குகள்' (General Tendencies)2.6iróT&T. soloisi gyós, ògigjøTió1(Sympathy), G,00Li Ly 2 @GIfï#@) (Suggestion), L 96ãTL 1,fò,fD@ (IInitation) என்பன இன்றியமையாதன. இம்மூன்றும் ஒருசார் ஒப் புமை யுடையன வெனினும், இவற்றுக்குள் வேற்றுமை யும் உண்டு. ஒருவர் உணர்ச்சிகளைப் பிறரும் எதிரொலித் தல் ஒத்துணர்வு ஆகும். ஒருவர் எண்ணக் குறிப்புகளையும் நோக்கங்களையும் பிறரும் எதிரொலித்தல் குறிப்புணர்தல்' ஆகும். ஒருவர் செய்யும் செயல்களைப் பிறரும் செய்தல் பின்பற்றுதல் ஆகும். இவற்றுள் நடுவண் கூறப்பட்டுள்ள 'குறிப்பு உணர்தல்' என்பது இக்குறளில் எதிரொலிக் கின்ற தன்ருே? மக்களுக்குக் குறிப்புணர்தல் என்னும் மனப்போக்கு இயற்கையிலேயே அமைந்து கிடப்பதால் தான், அவர்களே, அரசியல் கட்சித் தலைவர்களும், மதத் தலைவர்களும், வாணிக விளம்பரக்காரர்களும் ஆட்டிப் படைக்க முடிகிறது. இவர்களுள்ளும், மிக்க சீரும் சிறப் பும்-பேரும் பெருமிதமும் உடையவர்களின் எண்ணப் படியே பொதுமக்கள் ஆடுவர். இதற்குத்தான் பெருமி 355 @5ßüt J6Ti;56) (Prestige Suggestion) @TórJ] Qu /u/if,