பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 OO - டாக்டர். எஸ். நவராஜ செல்லையா

3.6long/30339&c & (Systematic Circulation)

இது இயல்பாக நடைபெறுகிற இரத்த ஓட்டம். அதாவது சுத்த இரத்தமானது தேகத்தின் எல்லா பாகங்களுக்கும் அனுப்பப்படுகின்ற அடிப்படை இரத்த ஒட்டமாகும்.

நுரையீரலில் சுத்தம் செய்யப்படுகிற இரத்தமானது, நான்கு நுரையீரல் சிரை வழியாக, இதயத்தின் இடது ஏட்ரியத்திற்குள் வந்து சேர்கிறது. -

இடது ஏட்ரியம் சுருங்கும் போது, அந்த சுத்த இரத்தம் இடது வென்டிரிக்களுக்குள் வந்து சேர்கிறது.

இடது வென்டிரிக்கிள் சுருங்கும் பொழுது, இரத்த மானது மகாதமணியில் (Aorta) பாய்கிறது.

இந்த மகாதமணி பல சிறு சிறு குழாய்களாகப் பிரிந்து, தேகத்தில் உள்ள எல்லா பாகங்களுக்கும் இரத்தத்தைக் கொண்டு சென்று கொடுத்து விடுகிறது.

இவ்வாறு பிரித்த சிறு குழாய்கள், மேலும் நுண்மையாகப் பிரிந்து தந்துகிகள்(Capillaris) என்ற பெயரைப் பெறுகின்றன. இவையே உடலில் அடிப்படை ILI TT 55 விளங்கும் திசுக்களுக்கும் செல்களுக்கும் இரத்தத்தை வழங்கி, செழிப்படையச் செய்கின்றன.

இந்தத் தந்துகிகளின் சுவர்கள் வழியாகவே, உயிர்க் காற்றும் உணவுப் பொருட்களும் செல்களுக்குப் போகின்றன.

இந்தத் தந்துகிகளின் சிறப்பு வேலை என்னவென்றால், செல்களுக்கு உணவையும் உயிர்க்காற்றையும் கொடுத்து விட்டு, அங்கு உண்டாகின்ற கழிவுப் பொருட்களைத் திரும்பப் பெற்றுக் கொள்கின்றன.