பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O4 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

A, B வகையினர் அதே வகையினர் இரத்தத்தையும், O வகையினரின் இரத்தத்தையும் பெறலாம் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றார்கள். - உடற்பயிற்சியும் இரத்த ஓட்டமும்

உடற்பயிற்சிகள் எல்லா தசைகளையும் வலிமையாக்கு கின்றன. அது போலவே, உடற்பயிற்சியானது இதயத்தையும் வலிமைப்படுத்துகிறது. ஏனென்றால், இதயமானது முழுக்க முழுக்க, தசையால்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதயத்தின் வேலையாக, இரத்தத்தை இறைக்கும் செயலே எப்பொழுதுமாக இருக்கிறது. உடலின் திசுக்களுக்கு இரத்தமானது உணவையும் உயிர்க்காற்றையும் கொடுத்து விட்டு, அங்கே கிடைக்கும் கழிவுப் பொருட்களைக் கொண்டு வந்து, நுரையீரலுக்குக் கொடுத்துத் தூய்மை யாக்கும் தெய்வீகப் பணியை இதயம் செய்கிறது. s இவ்வளவு விரைவாகவும், உயர்வாகவும், தரமாகவும், திறமையாகவும் செய்கிற இதயத்தின் பணி, எடுத்துரைக்க முடியாத மேன்மையான ஒன்றாகும்.

ஒய்வு நேரத்தின் போது, உடலின் எல்லா பாகங் களுக்கும் இரத்தம் அனுப்புகிற வேலையின் நேரம் 1 நிமிடம் என்று கணக்கிட்டிருக்கின்றார்கள்.

உடற்பயிற்சியின் போது, இந்த வேலையானது 10 நொடி நேரத்திற்குள் முடிந்து போகிறது. இதுதான் உடற் பயிற்சியின்

மகிமை. -

ஒரு கணக்கு

ஒரு முறை இதயம் சுருங்குகிற போது, இதயம் இறைக்கிற இரத்தத்தின் அளவு 28 மில்லி லிட்டர், இப்படியாக இதயம் ஒரு நிமிடத்தில் 70 தடவைகள் சுருங்கி இரத்தத்தை இறைக்கின்ற்து.