பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

எல்லா காற்றுப் பாதைகளுமே சிலியா எபிதிலியம் கொண்ட சளிப்படலத்தால் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த சளிப்படலத்தில் உள்ள சுரப்பிகள், எப்பொழுதும் சளியை சுரந்து கொண்டிருக்கின்றன.

அதனால் என்ன பயனென்றால், காற்றுடன் உள்ளே புகுந்த தூசியும் நுண்கிருமியும், சளியுடன் ஒட்டிக் கொள்கின்றன.

சிலிய எபிதீலியத்தின் சிலியா, உள் மூச்சுக்கு எதிர்த் திசையில் இடைவிடாது அதிர்ந்து கொண்டேயிருப்பதால், மூச்சு வழிப் பாதையில் ஒட்டிக் கொண்ட தூசிகளும் நுண்கிருமிகளும், உடனடியாக அகற்றப்படுகின்றன.

/.. espco, ogo (Nasal Cavity)

மூக்குப் பாகமானது இரண்டு சிறிய காற்றுப் பாதைகள் உடையதாக, குருத்தெலும்பால் ஆக்கப் பட்டிருக்கிறது.

மூக்கினை இரண்டு பகுதியாகப் பிரிக்கின்ற குருத்தெலும்பின் பெயர் நேசல் செப்டம் (Nasal Septum) ஆகும்.

மூக்கின் உட்புறத்தில், ஆயிரக்கணக்கான நுண்ணிய மயிர்கள் இருக்கின்றன. அவற்றை சிலியா (Cilia) என்று அழைப் பார்கள். அவை வெளிப்புறமாகவே இயங்கும் விதத்தில் அமைந்திருக்கின்றன. f

இது உட் கொள்கிற காற்றில் ஒட்டிக் கொண்டிருக்கும் தூசியை உள்ளே செல்ல விடாமல் தடுத்து நிறுத்துகிறது. அதனாலே தான், நம்மை மூக்கு வழியாகவே சுவாசிக்க வேண்டும் என்பதாகக் கட்டாயப் படுத்துகின்றார்கள்.

மூக்கிற்குள்ளே சவ்வு என்று ஒன்று இருக்கிறது. இது ஒரு விதமான திரவத்தைச் சுரக்கும் ஆற்றலைப்