பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 119

மேலே ஏறிவருகிறது. இவ்வாறு அதன் மேலேறும் இயக்கத் தால், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள விலாவிடைத் தசைகளில் சுருக்கம் ஏற்பட, மார்புக் கூடும் மேலாக விரிந்து கொள்ள, மார்புக் கூட்டின் கொள்ளளவு கூடுகிறது.

எனவே, வெளியில் உள்ள காற்றின் அழுத்தத்திற்கு ஈடாகும் வரை, காற்று உள்ளுக்கு இழுக்கப்படுகிறது.

வெளியே தள்ளுதல்

உதரவிதானம், தான் முன்பு இருந்த நிலைக்கு வந்து விடுவதாலும், உள்ளே உள்ளவிலாவிடைத் தசைகள் சுருங்கு வதாலும், மார்புக் கூடும் தனது பழைய நிலைக்கு வருகிற காரணத்தாலும், மார்புக் கூட்டின் கொள்ளளவு குறைகிறது.

இதன் காரணமாக, நுரையீரலிலுள்ள காற்றானது, வெளியே விரைந்து தள்ளப்படுகிறது.

நுரையீரலில் காற்றுப் பரிமாற்றம் (Exchange of Air)

நாம் மூச்சிழுத்த பிறகு, காற்றுப் பைகளிலே நிறைய காற்று நிரம்பிவிடுகிறது. இந்தக் காற்றுப்பைகளைச்சுற்றிலும் மெல்லிய இரத்தத் தந்துகிகள் செல்கின்றன. இந்த இரத்தத் தந்துகிகள் சுவற்றையும், காற்றுப் பைகளின் சுவற்றையும் ஊடுருவிக் கொண்டு, பிராணவாயு இரத்தத்தில் கலந்து

அதாவது இரத்தத் தந்துகிகளுக்கும், காற்றுச் சிற்றறைகளின் சுவர்களுக்கும் இடையே தான், காற்றுப் பரிமாற்றம் நடைபெறுகிறது.

சிற்றறைகளிலிருந்து பிராணவாயு இரத்தத்தில் கலக்கிறது. இரத்தத்தில் இருந்து கரியமிலவாயு, சிற்றறை