பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 121

காற்றும் சுவாசமும்

சுவாச வேலையானது, மூளையால் எப்பொழுதும் கட்டுப்படுத்தப்படுகிறது. சுவாசம் ஒரு தன்னியக்கமான பணியாகும். - - -

நாம் வேலை எதுவும் செய்யாத நேரத்தில், அல்லது ஒய்வாக இருக்கும் சமயத்தில், பிராணவாயுவின் தேவை பெரிய அளவில் இல்லாமல் இருக்கிறது. சுவாசம் மெதுவாக இருப்பதுடன், காற்றின் கொள் அளவும், குறைவாகவே இருக்கிறது. -

வேலை அல்லது உடற்பயிற்சி செய்கிற போது, பிரான வாயுவின் தேவை அதிகமாகிறது. சுவாசம் ஆழ்ந்து மேற் கொள்ளப்படுகிறது. அத்துடன் விரைவாகவும் அமைகிறது.

அதிகமான சுவாசம் மேற்கொள்ளப்படுவதானது, உடல் உழைப்பு, மனநிலை, உயர்கின்ற உஷணத்தின் அளவு இவற்றால் வேறுபடுகின்றது - மாறுபடுகின்றது.

நாம் முன்னர் கூறியது போல, மூச்சிழுக்கும் தன்னியக்க முறையானது, மூளையின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கிறது. பணியாற்ற முடுக்கும் மூளையின் பகுதியை, முகுளம் என்று அழைப்பார்கள். -

வயிற்றையும் மார்புப் பகுதியையும் பிரிக்கின்ற அமைப்பில், இடைப் பகுதியில் அமைந்திருக்கும் உதரவிதானமானது, சுருங்குகிறபோது, மார்பு விலா எலும்புகள் விரிவடைகின்றன. அப்பொழுது மார்பு உட்பகுதியின் இட அளவும் விரிவடைந்து கொள்கிறது. அப்பொழுது, நுரையீரலில் அழுத்தம் குறைவடைகிறது. அங்கே ஒரு வெற்றிடம் ஏற்பட்டு விடுகிறது.