பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

இத்தகையத் தரம் மிக்க நுரையீரலின் இன்றியமையாத மூச்சுத் திறனை அளக்கும் கருவிக்கு ஸ்பைரோமீட்டர் என்று பெயர்.

இயற்கையான சுவாசத்திறன் (Tiddal Air) 500 க.செ.மீ.

ஆழ்ந்து இழுக்கும் சுவாசத்திறன் (Inspiratory) 1500 க. செ.மீ.

வெளிவிடும் திறன் (Expiratory) + 1500 க.செ.மீ.

ஆகவே, மூச்சுத்திறன் என்பது 500 1500 + 1500 = 3500 கன சென்டி மீட்டர் காற்றாகும்.

முழுமையாக வெளி மூச்சு விட்ட பிறகும் கூட, நுரையீரல்களில் சுமார் 1000 செ. மீட்டர் காற்று தேங்கி இருக்கும். இதற்கு எஞ்சிய காற்று என்று பெயர். இந்த எஞ்சிய காற்று உள்ளே இருப்பதால் தான், தண்ணிருக்குள் வைக்கப்பட்டிருக்கும் நுரையீரல் மூழ்காமல் இருக்கிறது.

ogorz agugs espe (Second wind)

ஒரு வேலையைத் தொடர்ந்து செய்கிறபோது அல்லது தொடர்ந்து ஒடிக்கொண்டிருக்கிறபோது, உடலில் ஏற்படுகிற ஒருவித, இனம் புரியாத வலியும் வேதனையும், துன்ப உணர்வும், வேலையை அல்லது ஒட்டத்தை முடிக்கத் தூண்டுகிற மூச்சுத் திணறலும் தொடர்ந்து உண்டாகி தன்னம்பிக்கையைக் கூடத் தளர்த்திவிடும்.

இவ்வாறு ஏற்படுகிற உடல் வலியையும் மூச்சுத் திணறலையும் மனவலிமையுடன் ஏற்றுக் கொண்டு, தொடர்ந்து ஒட்டத்தை அல்லது வேலையை செய்து கொண்டு வருகிறபோது, வேதனையளித்த திணறலும் தேகவலியும்,