பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 - டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

மேற்கூறிய செயல்கள் எல்லாம், தேகத்தின் தாங்காத நிலையை தெளிவுபடுத்துகிற அறிகுறிகளாகும். மொத்தத் தில், மூச்சுத்திணறலே முதன்மையாகத் தோன்றி, மனத்தின் முனைப்பினை மண்ணடித்து, பின்வாங்கச் செய்துவிடும்.

இந்த நிலை ஏன் ஏற்படுகிறது?

தொடர்ந்து செய்கிற உடல் உழைப்பினால், அல்லது

ஒட்டத்தினால், அல்லது ஏதாவது ஒரு வேலையால், பிராண

வாயு பற்றாக்குறை தேகத்தில் ஏற்படுகிறது.

அதாவது, பிராணவாயுவின் செலவு அதிகமாகி விட, பிராண வாயுவின் வரவு குறைந்து போகிறது. உள் சுவா சத்திலிருந்து வரும் பிராண வாயு குறைவாக இருந்து, உடல் தசைகளில் செலவாகிற பிராணவாயு அதிகமாகிப் போவதால்-கரியமில வாயு அதிகமாக உடலில் தேங்கிப் போவதால்தான், அப்படிப் பிராண வாயுவில் பற்றாக்குை ஏற்பட்டுவிடுகிறது. -

இதற்காக துரிதமான சுவாசம் ஏற்பட்டு விட, நாடித் துடிப்பு அதிகமாக ஏற்படுகின்ற பாதகமான நிலையும் உண்டாகி விடுகிறது. ... “

இதைத் தொடர்ந்து, இரண்டாவது மூச்சு ஏற்படுவதால், மூச்சு விடுவதில் ஏற்படும் அசைவுகள் சமநிலை அடைந்து, ஆக்சிஜன் உட்கொள்ளும் அளவும் அதிகரித்து, உழைக்கும் திறனும் அதிகமாகி, இயற்கையான சகஜ நிலையை ஏற்படுத்தி விடுகிறது.

இரண்டாவது மூச்சு ஏற்படுகிறபோது

1. சுவாசத்தில் திணறல் மறைகிறது. சுமுகமான சுவாசம் நடைபெற்றுக் கொள்கிறது. காற்றுக் கொள்திறன் அதிகமாகிறது. -