பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 127

2. கார்பன் டை ஆக்சைடு விரைவில் வெளியேற்றப் பட்டு, ஆக்சிஜன் வரவும் அதிகமாகி, சமநிலை உண்டாகி விடுகிறது.

3. இதயத்துடிப் பின் தடுமாற்றம் நீங்கி, ஒரு சீரான இயக்கமும் இயற்கையான வழியில் இயங்கத் தொடங்குகிறது.

4. தசைகளில் ஏற்படுகிற வீக்கமும் வலியும் குறைந்து போகிறது. ஏனெனில், பிராணவாயு போதிய அளவு தசைகளுக்குப் போய்ச் சேருகிறது.

5. உடலில் உஷ்ணநிலை சீராகி விடுகிறது. தசைகளில் சூடு உண்டாகியும், வியர்வை வெளி வந்தும், உழைக்கும் தசைகளுக்கு ஆறுதலை உண்டாக்கி விடுகிறது.

6. மூளையைத் தாக்குகிற மெய் வருத்தும் உணர்ச்சிகள் மறைந்து போகின்றன. அதனால், இயல்பான, இனிமையான, இதமான மனோநிலையும் ஏற்பட்டு விடுகிறது.

இருமலும் தும்மலும்

இருமலும் தும்மலும், மூச்சு விடுதலின் பாதுகாப்பு அனிச்சை செயல்களாக விளங்குகின்றன.

மூச்சு விடுதலானது, பெருமூளைப் பகுதியின் கட்டுப் பாட்டிற்கு அடங்கியுள்ளது. ஒருவன் தானாக முன்வந்து சுவாசத்தைக் கட்டுப்படுத்தவும், அதிக அளவில் சுவாசிக்கவும் முடியும்.

ஒருவன் உணர்ச்சிவசப்படுகிறபோது, மூச்சு விடுகிற சுவாசிக்கும் தன்மை வேகமடைகிறது. -