பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

வெளியேற்றவும் கூடிய வாய்ப்புகள் நிறையவே ஏற்படுகின்றன. - - -

நன்றாக உடற்பயிற்சி செய்கிறவர்கள் 1 நிமிடத்திற்கு 6

முதல் 8 வரை (சுவாசம்) மூச்சிழுக்கிறார்கள் என்பது உண்மையான உதாரணமாகும்.

உடற்பயிற்சி செய்யாதவர்கள் நிறைய, அதிகமான

பிராணவாயுவுக்காக, உடற்பயிற்சி செய்பவர்களை விட, பலமுறை சுவாசிக்கின்ற நிலைக்கு ஆளாகி விடுகின்றார்கள். அவ்வாறு பலமுறை இழுக்கும் செயலால், நுரையீரல் பாதிக்கப்படுவதற்கு ஏதுவாகப் போவதும் உண்டு. - -

உடற்பயிற்சியால் சுவாச மண்டலத் தசைகள் முழுதும் விருத்தியடைவதுடன், வேலை செய்யும் சக்தியையும், வேலைப்பளுவைத் தாங்கும் சக்தியையும் அதிக மாகவே வளர்த்துக்கொள்கின்றன.