பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் * - 139

திரவ உணவை விட, உலர்ந்த உணவுக்குத்தான், நாய்களுக்கு அதிகமாக உமிழ் நீர் சுரக்கிறது. அத்துடன், நாய்கள் உண்ணுகிறபோது தான், உமிழ்நீர் சுரக்கிறது.

ஆனால், மனிதர்களுக்கு, எந்த உணவு வகையை உண்ணும்போதும், உமிழ் நீர் சுரக்கிறது. மனிதன் உண்ணாதபோதும் கூட, குறைந்த அளவிலான உமிழ்நீர், இடைவிடாது சுரந்து கொண்டிருக்கின்றது.

இன்னும், உணவு வாசனையை நுகரும்பேர்தும், சில சமயங்களில் உணவைப் பற்றி நினைத்துக் கற்பனை செய்யும் போதும் கூட மனிதர்களுக்கு சுரப்பிகள் சுனையாக மாறி உமிழ் நீரைச் சுரந்து விடுகின்றன.

உமிழ்நீர் சுரப்பியும் நரம்பு மண்டலமும்:

உமிழ்நீர் சுரப்பிகளின் இயக்கம் முழுவதும், நரம்பு மண்டலத்தால், அனிச்சையாகக் கட்டுப் படுத்தப்படுகின்றன. எப்படி? r. -

வாய்க் குழியிலுள்ள உணவு, உணர்வு நரம்புகள் வழியாக, நரம்பு உந்தல்களால் கிளர்த்தல் ஏற்பட்டு, உமிழ்நீர் சுரப்பி கேந்திரமான முகுளத்தை அடைந்து விடுகின்றது. அங்கிருந்து கட்டளையை ஏந்தி வருகின்ற நரம்புகள், உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றன.

இந்த விதமாக, யாருக்கும் கட்டுப்படாமல் உமிழ்நீர்ச் சுரப்பி, அனிச்சையாகச் செயல்படுகிறது. உமிழ்நீரின் உபயோகங்கள்:

1. எப்பொழுதும் வாயை ஈரமாக இருக்கச் செய்யவும், இதழ்ப் பிடிப்போ, தடையோ எதுவும் இல்லாமல் பேசவும் உதவுகிறது.