பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 - டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

2. வாயை சுத்தமாகக் கழுவி, எப்பொழுதம் தூய்மையாக

வைத்திருக்க உதவுகிறது. *

3. வாயில் கலக்கின்ற விஷத் தன்மையுள்ள பொருட் களை, நீர்மயமாக்கி, வெளியேற்றி வைக்கிறது.

4. உண்ணுகிற உணவுப் பொருட்களோடு சேர்ந்து,

குழம்புபோல் ஆகி, எளிதாக விழுங்கவும், இனிதாக ஜீரணப் பணிகள் நடைபெறவும் உதவுகிறது.

நாக்கு (Toungue)

அமைப்பு

நாக்கானது, மியூகஸ் மெம்பரேன் என்கிற சளிப்படலத் தால் போர்த்தப் பெற்ற தசையால் அமைந்த ஒர் உன்னத உறுப்பாகும்.

நாக்கிற்கு நுனி, உடல், அடித்தளம் என மூன்று பகுதிகள் உண்டு.

நாக்கின் நுனியும் உடலும் எலும் புடன் இணைவ தில்லை.

நாக்கின் அடித்தளம் ஹையாய்டு எலும்புடன் இணைந் துள்ளது.

நாக்கின் தசைகள் இரு வகைப்படும்:

1. நாக்குத் தசைகள்: நாக்குத் தசைகளின் இழைகள் இடைமட்டமாக, குறுக்காக, செங்குத்தாக, மூன்று திசைகளிலும் செல்கின்றன. இவற்றின் சுருக்கமே, நாக்கின் வடிவத்தையே மாற்றி வைத்திருக்கிறது.

2. எலும் புகளுடன் பொருந்திய தசைகள்: மூன்று ஜோடி நாக்குத் தசைகள், எலும்புகளில் துவங்குகின்றன.