பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

(அ) டெண்டின் என்பது பல்லின் பிரதானப்பகுதியாகும். பெரும்பாகமாக அமைந்துள்ள டென்டின், எலும்பு போன்ற அமைப்பு உடையதாக இருந்தாலும், எலும் பை விட வலுவானதாகும். -

(ஆ) எனாமல் என்பது பல்லின் சிகரப் பகுதியை மூடிக் கொண்டிருக்கிறது. எனாமல் என்பது உடலிலே இருக்கும் திசுக்களிலே மிகவும் கடினமான திசுவாகும்.

(இ) சிமெண்ட்: பல்லின் காரை என்பது எலும்பின் அமைப்பை ஒத்திருக்கும் பல்லின் வேரையும், கழுத்துப் பகுதியையும் இந்த பற்காரை மூடிக் கொண்டிருக்கிறது. பற்களும் எண்ணிக்கையும்:

பற்களை தற்காலிகப் பற்கள் அல்லது நிலையற்ற பற்கள் என்றும், நிரந்தரப் பற்கள் என்றும் இரண்டாகப் பிரித்துக் காட்டுவார்கள். - நிலையற்ற பற்கள் (Milk Teeth)

குழந்தைகள் பிறக்கிற போது, பற்கள் எதுவும் கிடையாது. ஆறேழு மாதங்கள் கடந்த பிறகு, நிலையற்ற பற்கள் முளைக்கத் தொடங்குகின்றன.

2% அல்லது 3 ஆண்டுகளுக்குள், கீழ்க்கண்ட முறையில், பால் பற்கள் என்கிற நிலையற்ற பற்கள் முளைத்து முடிகின்றன.

மேல் தாடையில் - 10 பற்கள் கீழ்த் தாடையில் - 10 பற்கள் வெட்டுப் பற்கள் – 2+2

கோரைப்பல் - 14-2 கடைவாய்ப் பற்கள் - 2+2