பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 48 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

உணவுக்குழாயில் 4 உறைகள் உள்ளன. (g) ga o cop (Fibrous Coat) (*!) g;60& 2 cop (Muscular Coat)

(இ) சளி அடி உறை (ஈ) வெளி உறை

உணவுக் குழாயின் 3 செ.மீ. நீளம், வயிற்றுக்குள் இருக்கிறது. மார்புக் கூட்டிலிருந்து உதரவிதானத்தின் கீழ் முதுகுப் பகுதியில் உள்ள துவாரத்தின் வழியாக, வயிற்றுக்குள் சென்று இரைப்பையோடு சேர்கிறது.

@60s isol (stomach)

இடமும் அமைப்பும்

உணவு வந்து தேங்குகிற இடமாக இருக்கின்ற இரைப்பை, ஜீரணப் பாதையிலே, ஒரு பெரிய பகுதியாகும். உதரவிதானத்திற்குக் கீழே, வயிற்றுக் குழிக்கும் மேற் பகுதியிலே, வயிற்றின் இடது புறமாகவும், நடுவாகவும் இரைப்பை அமைந்துள்ளது.

இதன் உருவ அமைப்பு ஆங்கில எழுத்தின் போன்று அமைந்திருக்கிறது.

இரைப்பையின் அளவும் வடிவமும், அதில் உள்ள உணவின் அளவைப் பொறுத் தே அமைந்து விடுகிறது. சாதாரணமாக, அதன் அளவு 1 முதல் 2 லிட்டர்கள் கொள்ளும் அளவாக அமைந்திருக்கிறது.

இரைப்பையானது இரண்டு வளைவுகளையும், இரண்டு திறப்புக்களை உடையதாகவும் விளங்குகிறது.

இரைப்பையில் உள்ள மேல் வளைவிற்கு, சிறிய

வளைவு என்றும், (Lesser Curvature); கீழ் வளைவிற்குப் பெரிய வளைவு (Greater Curvature) என்றும் பெயர் உண்டு.