பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

1. முன்சிறு குடல் (Duodenum) 2. நடுச் சிறுகுடல் (Jejunum) 3. கடைச் சிறுகுடல் (leum)

1. முன் சிறுகுடல் : ஆங்கில எழுத்து U போன்ற வடிவத்தில் இது அமைந்திருக்கிறது. இது, இரைப்பையின் பைலோரிக் பகுதியில் ஆரம்பமாகிறது. இதன் நீளம் 10 அங்குலம் இருக்கிறது.

இதன் வளைவினுள் பித்த நாளமும், கணைய நாளமும் திறக்கின்றன. பித்தநீர் என்பது Bile Juice. கணையநீர் argrproo Pancreatic Juice.

2. நடுச்சிறுகுடலும், கடைச்சிறு குடலும் வயிற்றுக் குழியின் நடு மற்றும் கீழ்ப்பகுதியில் உள்ளன.

முன்சிறுகுடலைத் தவிர்த்து, சிறுகுடலின் மேற்புற 2/5 பகுதியை ஜிஜூனம் என்றும்; கீழ்ப்புற3/5 பகுதியை இலியம் என்றும் நாம் கொள்ளலாம். அதாவது Tஜூனமும் இலியமும், டியோடினப் பகுதியின் தொடர்ச்சியாகும்.

இலியம் என்பது பெருங்குடலினுள் திறக்கிறது. சிறு குடலும் இரைப்பையைப் போன்று நான்கு உறைகள் கொண்டு விளங்குகிறது. அவற்றைப் படல உறை, படல அடி உறை, தசை உறை, பெரிடோனிய உறை என்று கூறுவர்.

இந்தப் படல உறை என்கிற மியூகஸ் உறையில்தான், வளைய மடிப்புக்களும் (Circular folds) குடலுறிஞ்சிகளும் (Willi) இருக்கின்றன. s

குடலுறிஞ்சிகள் (Villus): படல உறையிலுள்ள துருத்திகளைத்தான் குடலுறிஞ்சி என்கிறார்கள்.

இவை விரல் வடிவம் கொண்ட உறுப்புக்களாக விளங்குகின்றன.