பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 155

கணையத்தில் சிறுமடல்கள் பலவுள்ளன. இந்த சிறு மடல்களில் உள்ள சுரப்பிச் செல்கள் தான், கணையத் திரவத்தைச் (Pancreatie Juice) சுரக்கின்றன.

இந்தக் கணையக் குழாயானது, சுரப்பியின் உள்ளேயே நீளமாகச் சென்று, முன் சிறுகுடலான டியோடேனியத்தில் திறக்கிறது. (கணைய நீரின் பயன்கள் பின்வரும் பகுதியில் காண்க).

சிறுகுடலும் ஜீரணமும்

நாம் உண்ணுகிற உணவு, உமிழ் நீருடன் கலந்து, இரைப்பைக்குள் செல்கிறது. அங்கு கூழ் உருவமாகி, கைம் என்ற பெயரைப் பெறுகிறது. அங்கிருந்து சிறிது சிறிதாக, சிறுகுடலை அடைகின்றது. இங்கு மேலும், பல வேதியல் மாற்றம் அடைந்து, அங்கு வருகின்ற செரிமான சுரப்புகளுடன், கூழை கலக்கச் செய்து, திரவ நிலையாக்கவிடுகின்றது.

இங்கு கணைய நீர், பித்த நீர், குடல் நீர் போன்றவை வந்து கலந்து, புரதம், கொழுப்பு, மாவுப்பொருட்கள் போன்ற பொருட்களை உடைத்துக் கரைக்கும் ஒப்பற்ற பணியில் ஈடுபடுகின்றன.

இனி, ஒவ்வொரு நீரும் செய்கின்ற செயல்களைக்

காண்போமாக.

/. கணைய நீர்

கார நிலை கொண்ட கணைய நீரில், 3 விதப்பொருட்கள் இருந்து, கீழ்க்கண்ட முறையில் செயலாற்றிப் பணிபுரி கின்றன.

(அ) டிரிப்சின் (Trypsin): இது புரோட்டினை (புரதம்) அமினோ அமிலமாக மாற்றுகிறது.