பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 157

ஜீரணத்தின்போது, கொழுப்புப் பொருளைக் கூழாக்க பித்த நீர் உதவுகிறது.

பித்த நீர்ப்பையிலும், பித்த நீர்க் குழாய்களிலும், சில நேரங்களில் பித்தக் கற்கள் (Gall - stones) உண்டாகின்றன. இதில் ஒன்று தான், பித்த நீரில் உள்ள கொழுப்புப் பொருளான கொலஸ்ட்ரால் ஆகும்.

கல்லீரல் மற்றும் பித்த நீர்க் குழாய்கள் கற்களால் அடைபடுகிறபோது, காமாலை நோய் உண்டாகிறது என்கிறார்கள்.

உணவும் கிரகிப்பும்

இவ்வாறு கூழாகவும், நீரில் கரையும் எளிய பொருளாக வும் உணவுப் பொருட்கள் மாற்றப்படும் பணி, சிறு குடலுடன் முடிவடைகிறது.

இத்தகைய உணவுக் குழம்பானது, ஜீரண மண்டலத் திலிருந்து, இரத்தத்திற்குள்ளும், நிணநீருக்குள்ளும் இழுக்கப்படுவதையே கிரகிப்பு என்று கூறுகின்றார்கள்.

இந்த கிரகிப்புப் பணி, குடலுறிஞ்சிகளின் மூலமே

நடைபெறுகிறது. ஆகவே, உறிஞ்சிகள் இருக்கின்ற சிறு குடலின் பரப்புப்பகுதி 4-5 ச.மீட்டராக இருக்கிறது.

கிரகிக்கும் இடங்கள்

1. தண்ணிர், அதில் கலந்துள்ள தாது உப்புக்கள்; புரதம் உடைந்து கரைந்ததால் கிடைக்கும் அமினோ அமிலங்கள்; கார்போஹைடிரேட்டு உடைந்து கிடைத்த மானோசாக் கரைடுகள் எல்லாம், இரத்தத்தால் கிரகிக்கப்படுகின்றன.

2. கொழுப்புப் பொருட்கள் கரைந்து வருகின்ற கொழுப்பு அமிலங்கள் தண்ணிரில் கரையாததால், சிறு