பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

கிராம் என்கிறார்கள். பெருங்குடலிலிருந்து மலம் வெளியேற 12 முதல் 24 மணி நேரம் ஆகிறது.

உடற்பயிற்சியும் ஜீரணமண்டலமும்

1. தேகமானது திறமாகவும் தரமாகவும் திகழ வேண்டும் என்றால், வயிற்றுப் பகுதியிலுள்ள தசைகளும், நரம்புகளும், சிறுகுடல் போன்ற பாகங்களும், சிறப்பாகவும் செழிப்பாகவும் செயல்பட வேண்டும்.

அவ்வாறு தேகம் திகழ, உடற்பயிற்சி உறுதுணையாக இருக்கிறது.

2. உடற் பயிற்சியின் முக்கியமான குறிக்கோளாக விளங்குவது, தேகத்தின் எடையை சரியாகவும், சீராகவும் காத்து நிற்பதுதான்.

தேகத்தின் உயரத்திற்கும், வயதுக்கும் ஏற்றாற் போல, இவ்வளவுதான் எடை இருக்க வேண்டும் என்று, வல்லுநர்கள் கணக்கிட்டுக் கூறியிருக்கின்றார்கள்.

கணக்குக்கு மேலே எடை கூடியிருந்தால், அது அதிக எடையாகும். உடலின் தோற்றமும் குண்டாகவும் தடியாகவும் தெரியும்.

அதிக எடையும் ஊளைச்சதையும் எப்படி ஏற்படுகிறது என்றால், உண்பதாலும், குடிப்பதாலும் உண்டாகின்ற உணவுப் பொருட்களில் உள்ள கலோரிகளை, சரியாக எரித்திட இயலாமற் போவதால் தான்.

இவ்வளவுதான் சாப்பிட வேண்டும், இத்தனை கலோரிகள்தான் இருக்க வேண்டும் என்ற கணக்குப் போலவே, இவ்வளவு கலோரிகள் எரிந்தாக வேண்டும் என்ற

முறையும் அளவும் இருக்கிறது.