பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 1.65

நாளமில்லா சுரப்பி மண்டலம் ஏன் இந்தப் பெயர் வந்தது?

எண்டோகிரைன் (endorine) என்ற சொல்லுக்குரிய அர்த்தத்தை முதலில் தெரிந்து கொள்வோம்.

Endon என்ற சொல்லுக்கு Within அதாவது உள்ளுக்குள்ளே என்றும்; Kinein என்ற சொல்லுக்கு To seperate அதாவது தனியாக, சிறப்பாக என்று அர்த்தம் இருக்கிறது. -

உள்ளுக்குள்ளே சுரக்கின்ற விஷேஷமான பொருள் என்று இதற்குப் பொருள் கூறுகின்றார்கள்.

இந்த விஷேஷமான பொருளுக்கு, அல்லது திரவத்திற்கு ஹார்மோன்கள் (Harmones) என்று பெயர். ஹார்மோன் (Harmon) என்ற கிரேக்கச் சொல்லுக்குக் கிளர்த்தல் (To stir பp) என்று பெயர்.

உயிரினத்தில், ஹார்மோன்கள் மிக முக்கியமான பங்கினை வகிக்கின்றன. -

நம் உடலில் நடைபெறுகின்ற காரியங்கள் எல்லாமே, இந்த ஹார்மோன்களின் உதவியினுடனேயே செயலாக்கம் பெறுகின்றன.

நமது உடலின் வளர்ச்சிக்கு; சிதையும் திசுக்கள் சீரடைதலுக்கு அடிப்படை உணர்வுகளின் உந்துதல்களுக்கு; இன உணர்வுகளின் ஊக்கத்திற்கு; கோபம், பயம், கொடுரம். சந்தோஷம், துயரம் போன்ற குணாதிசயங்களுக்கு; சந்தர்ப்பங்களுக்கும், தேவைகளுக்கும் ஏற்றவாறு தேகத்தைத் தயார் செய்துகொள்வதற்கு; மாற்றி அனுசரனையாக வைத்துக் கொள்வதற்கு படையெடுக்கும் நோய்களிலிருந்து