பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 15

இதன் பணியாவது: வெளியிலிருந்து நிகழ்கின்ற அபாயங்களிலிருந்து, செல்லை சுகமாகவும் பத்திரமாகவும் காத்து உதவுவது போல அமைந்திருக்கிறது.

செல்லுக்குத் தேவையான ஆகாரமும் உயிர்க் காற்றும் இந்தச் சுவர் வழியாகத்தான் உள்ளே செல்கின்றன. செல் செயல்படுகிறபோது அங்கே ஏற்படுகிற கழிவுப் பொருட்களும் கரியமிலவாயுவும் இதன் வழியாகத் தான் வெளியேறுகின்றன.

2. நூக்ளியளப்

நூக்ளியல் என்பது செல்லின் உட்கரு ஆகும். இது செல்லின் மத்தியில் அமைந்துள்ளது. இது முட்டை அல்லது கோள வடிவத்தில் அமைந்துள்ளது.

சைடோ பிளாசம் என்ற பகுதியிலிருந்து உட்கருவை, அந்த உட்கருவைச் சுற்றியிருக்கும் மெல்லுறை ஒன்று பிரித்து விடுகிறது. இந்த உட்கருவின் உள்ளே, குரோமேட் ஷன் also avoir (Chromation thread) arcrp Quirogoth காணப்படுகின்றன.

இந்த உட்கருவின் உள்ளே இருக்கும் புரோட்டோ பிளாசத்திற்கு நியூகிளியோ பிளாசம் (Nucleo Plasm) என்று பெயர். இதனுள் அடர்த்தியாக இருக்கும் ஒரு பாகத்திற்கு நியூகிளியோலஸ் (Nucleolus) என்று பெயர்.

நூக்ளியஸின் பிரதான அங்கம் குரோமோசோம்கள் (chromosomes) என்று அழைக்கப்படுகின்றன. ச்ெல் ஒன்று இரண்டாகப் பிரிந்து, இனவிருத்திக்காக ஏற்படுகிற பெரிய மாற்றத்தின் போது, குரோமோட்டின் வலைகள், சிறு கம்புகள் போன்று மாறுகின்றன; இதைத்தான் குரோமோ சோம்கள் என்று கூறுகின்றனர்.